
ஜவஹர்லால் நேருவின் 138-வது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டி கத்திப்பாராவில் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்
சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 14.11.2026 சனிக்கிழமை அன்று, பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 138-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு, மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் R. குமார், மாண்புமிகு ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. M. ஹரிஷ், மாண்புமிகு சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. M. அருள் பிரகாசம், மாண்புமிகு திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. டாக்டர் T. அருண்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


