

மாண்புமிகு அமைச்சர் என். ஆனந்த்
Hon'ble Minister N. Anand
- Minister for Rural Development and Water Resources
- General Secretary, Tamilaga Vettri Kazhagam
- MLA, Thiyagaraya Nagar
Focused on public welfare, rural development, water conservation and social justice.

அமைச்சர் N. ஆனந்த் அவர்கள் பற்றி
Bussy N. Anand serves as Minister for Rural Development and Water Resources in the Government of Tamil Nadu, and also as General Secretary of Tamilaga Vettri Kazhagam.
He focuses on public welfare, rural development and improving basic amenities for the people.
Learn moreTwo decades of public service
- 2006
Elected MLA from the Bussy constituency, Puducherry.
- 2006–2011
Served as a Member of the Puducherry Legislative Assembly.
- 2011–2023
Led Vijay Makkal Iyakkam work, public service and social welfare activities.
- 2024
Appointed General Secretary of Tamilaga Vettri Kazhagam (TVK).
- 2026
Elected to the Tamil Nadu Legislative Assembly from Thiyagaraya Nagar.
- Now
Serving as Minister for Rural Development and Water Resources, Government of Tamil Nadu.
Latest from the Minister

ஜவஹர்லால் நேருவின் 138-வது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டி கத்திப்பாராவில் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்
சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 14.11.2026 சனிக்கிழமை அன்று, பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 138-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு, மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் R. குமார், மாண்புமிகு ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. M. ஹரிஷ், மாண்புமிகு சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. M. அருள் பிரகாசம், மாண்புமிகு திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. டாக்டர் T. அருண்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Read more
சி.ஐ.டி. நகர் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை பார்வையிட்டார் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்
சென்னை: மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சி.ஐ.டி. நகரில் மழைநீர் சேகரிப்புத் திட்டப் பணிகளைப் பார்வையிட்டார்.
Read more
அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கேக் வழங்கி, மரக்கன்று நட்டு, சாதனை மாணவிகளுக்குப் பரிசளித்தார் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்
சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 13.11.2026 வெள்ளிக்கிழமை அன்று, மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கேக் வழங்கி, குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், அப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து மாணவிகளிடையே உரையாற்றிய அமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கும் சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. A. விஜய் அன்பன் கல்லாணை, சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K. அப்புனு (எ) வேல்முருகன், மாவட்ட, பகுதி மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணியினர், மகளிர் அணியினர் மற்றும் கழகத் தோழர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Read morePublic, party or ministry — we're listening.
Choose the category, tell us what happened and track every step.